வியாழன், 2 ஏப்ரல், 2009

கடந்தநிலைப் பகுப்பாய்வு

கான்டின் கடந்தநிலைப் பகுப்பாய்வு

1. கருத்துப் பொருள்களைப் பற்றிய பகுப்பாய்வு
2. அடிப்படைக‌ளைப் பற்றிய பகுப்பாய்வு

முதலாவது இரண்டாவது இரு பிரிவுகளைக் கொண்டது.
1. அகமன‌ இயல்பாக வருவித்தல்
2. கடந்த நிலை இயல்பாக வருவித்தல்


கான்டின் திட்ட அமைப்பு:-

காரண காரியம், நுண்பொருள், பன்மை, ஒருமை, பொதுமை உறவு போன்றவை மனத்தில் உள்ளார்ந்து இயங்கும் கருத்தினங்கள் ஆகும்.

முதலாவது ஓத்திசைவு
புறநிலைத் தோற்றத்தில் நிகழும் எல்லா மாறுதல்களிலும் பொருட்களின் அடிப்படை சாரம்சம் நிலையாய் உள்ளது. இயற்கையில் அதனுடைய அளவு மிகுதியாவதோ அல்லது குறைவதோ இல்லை.
பொருட்களின் அடிப்படைத் சாராம்சம் புலனால் அறியக்கூடியதும் நிலையானதுமாகும்.

இரண்டாவது ஒத்திசைவு
எல்லா மாறுதல்களும் காரண காரிய நியதிக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. காரணமின்றி எந்த ஒரு மாறுதலும் ஏற்படாது. இயற்கையில் பொருட்களின் ஏற்படும் அடுத்தடுத்த மாறுதல் களையும் அவற்றிற்கான காரணத்தைக் கொண்டுதான் புரிந்துக் கொள்ளமுடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக