கடந்த நிலை அளவையியல்- கான்ட்
அறிவைப் பெறுவதற்கான படிநிலைகள்
1.புலக்காட்சி
2. புரிதல்
3.சிந்தனை
புரிதல்களிலிருந்து கருத்துப் பொருட்கள் உருவாக்கப் படுகின்றன.
கருத்துப் பொருட்களிலிருந்து நாம் அறிவைப் பெறுகின்றோம்.
இடம், காலம் ஆகிய இரண்டும் புலனுணர்வுகளுக்கு முன்பான மனத்தின் புலச்சார்பற்ற அமைப்புகளாகும்.
இவை போலவே, புலக்காட்சிகளைத் தொடர்புபடுத்தி சிந்திப்பதற்கும் புரிந்துக் கொள்வதற்கும் பல்வேறு அமைப்புகள் மனத்தில் உள்ளார்ந்து இருக்கின்றன..
அவை தனிநிலைக் கருத்துப் பொருட்கள் அல்லது சிந்தனைக்கான கருத்தினங்கள் எனப்படுகின்றன.
பொருட்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய நம் புலன்களால் அளிக்கப்படும் தகவல்களை அல்லது புலன் உணர்வுகளை நம் உள்ளம் பதிவு செய்கின்றது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தகவல்கள் மட்டுமே அறிவாகா.
நம் மனம் இத்தகவல்களைப் பகுத்து அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட இடத்தில் காலத்தில் பொருத்துகின்றது. இவற்றிலிருந்து புலக்காட்சிகள் பெறப்படுகின்றன.
புலக்காட்சிகளிலிருந்து சிந்தனை மூலமாக அறிதலுக்கு உட்படுத்தி கருத்தினங்கள் உருவாக்கப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக