இடைக்கால சிந்தனையாளர்கள் தமது கருத்துலகில் மட்டுமே வாழ்ந்தனர். தம் சிந்தனைக்கேற்ப உலக அனுபவங்களை மாற்ற முயற்சி செய்தனர். அனுபவத்தின் அடிப்படையை ஆராயவோ அனுபவத்தின் அடிப்படையில் ஆராயவோ இல்லை.
இடைக்கால சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை கையாண்டு வந்தனர். இதற்கு வித்திட்டவர் அரிஸ்டாடில் ஆவர்.
பிந்தைய நூற்றாண்டில் நடந்தேறிய அறிவியல் எழுச்சி சிந்தனையாளர்களை அனுபவ உலகை நோக்கி ஈர்த்தது.உலகியல் அனுபவங்களிலிருந்து உண்மைகள் ஆராயப் பட்டன.
அறிவியல் எழுச்சி சிந்தனைமுறையை மாற்றியது எனலாம். அனுபவ வாதக் கொள்கைகள் உருவாக்கப் பட்டன. இதற்கு வித்திட்டவர் பிரான்சிஸ் பேக்கன் என்பவர் ஆவர். இவரது அளவையியலான ஆன ஆய்வுமுறைகள் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டன.
இப்போது தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார். பேக்கன் தொகுப்பளவை muraiயின் தந்தை எனப் போற்றப்பட்டார்.
அப்போதிருந்த முதன்மையான தத்துவ பிரச்சினை என்னவென்றால் உண்மைகள் உறைந்து கிடக்கும் இடம் இயற்கையா அல்லது மனித மனத்திலா என்பதுதான்.
சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.
சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.
தொகுப்பளவை முறை என்றால் என்ன?
அனுவத்தை அணுகி ஆராய்தல், அனுபவத்திலிருந்து பொதுக்கருத்தை உருவாக்குதல், உருவாக்கிய கருத்தை பரிசோதித்துப் பார்த்தல், ஆகிய பல கூறுகளைக் கொண்டதொகுஇப்பள்வை முறைகளே உண்மையை வெளிக் கொணர வல்லவை என்பார் பேக்கன்.
சிந்தனைமுறை பகுப்பளவை முறைகளை அறிவியல் ஆய்வுக்கு ஏற்றது என்றார் அரிஸ்டாடில். மாறாக தொகுப்பளவை முறைகள்தாம் அறிவியல் ஆய்வுக்கு ஏற்றவை என பேக்கன் எடுத்துக்காட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக