இயங்கியல் என்றால் என்ன? இயங்கியல் என்பது பொருளின் எதிர்எதிர் அம்சங்களையும் அவற்றின் இயக்கப்போக்கை ஆராய்தறிவதாகும். எளிய வகை முரண்பாடு படிப்படியாக வளர்ந்து பல்வேறு சிக்கலான முரண்பாடுகளை அடிப்படையாக கொண்டே சிந்தனை இயக்கம் முன்னேறுகின்றது.
இயக்கம் பற்றிய சிந்தனைகள் அன்று இயற்பியல் இயககத்தோடு நிற்கவில்லை, வேதியியல் இயக்கத்தையும், உயிரியல் இயக்கத்தையும், சமூக இயக்கத்தையும் அறிவியக்கத்தையும் கண்டு வளர்ந்து வளர்கின்றது.
ஆரம்பத்தில் எளிய முரண்பாடுகளை கொண்ட இயக்கத்தை உணர்ந்து மனிதமூளை சிந்தனையை வெளிபடுத்துகின்றது.சிந்தனை பொருளியக்கத்தை பாதிக்கவும், துரிதப்படத்தவும் செய்கின்றது. சிக்கலான முரண்களை கொண்ட பொருளியக்கத்தின் மீது, சிந்தனையானது தனது செல்வாக்கை செலுத்தி மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
பொருள் என்றால் என்ன? பொருளீய தன்மை அடிப்படையாக கொண்டு ஒரு தத்துவ வகையினம். பொருளானது சுதந்தரமான இருப்பை கொண்டாகும். அதன் உள் முரண்பாடுகளை சுய இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றன. இயக்கவியலின் ஆக்கபூர்வமான கூறுகளை வா£த்தெடுக்க வேண்டுமானால், பொருள் முதல் வாத்தினால் மட்டுமே அது இயலும், பொருள்முதல்வாத்தை பாதுகாக்க வேண்டுமானால் இயங்கியலின் பன்முக பரிணாமத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
இயங்கியல் என்ற பன்முக அறிதல் முறையுடன் பொருள்முதல்வாதம் என்ற ஒற்றைத் தத்துவம் ஆரத்தழுவிய போதுதான் மார்க்சியம் பிறந்தது. வரலாற்றின் பல சமயங்களில் இயங்கியல் கூறுகள், பொருள் முதல்வாத மல்லாத தத்துவங்களோடு இணைந்தும் செயல்பட்டன. கருத்துமுதல் வாதம் இன்னபிற தத்துவங்களை வளர்த்தெடுக்க இயங்கியல் தேவைப்பட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.புத்த பெருமான் இயங்கியலை வளர்த்தார். ஆனால் புத்தர் பொருள்முதல் வாதியில்லை. கிரேக்கத்தில் அரிஸ்டாடில் இயங்கியலை உணர்த்தினார். அவரும் பொருள் முதல் என்று கூற இயலாது .ஜெர்மானிய தத்துவஞானி ஹெகல் இயங்கியலை அதன் உச்சபட்ச வளர்ச்சிக்கு எடுத்துச் சென்றார். பொருள்முதல்வாதியான பாயர்பாத் இயக்க மறுவியல் சிந்தனையை கொண்டவராக இருந்தார். பின்னர் வரலாற்றில் இயங்கியலையும், பொருள்முதல்வாதமும், ஒன்றையொனற் தழுவிக்கொண்டது காலத்தின் கட்டாயம். மார்க்சியம் அதில் வெற்றி கண்டது.
ஆனால் குறுகிய காலத்திலேயே பொருளுக்கும் அதன் இயக்கத்திற்குமான இணைபபை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனை முறையைத் தக்கவைத்துக் கொள்வதில் மனித சமூகம் பெரும் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
வரலாற்று நீரோட்டத்தில் இயங்கியல் எங்கெல்லாம் பாய்கின்றதோ அங்கெல்லாம் செழுமையடைகின்றது. இயற்கை, சமூகம், சிந்தனை ஆகிய முப்பெரும் துறைகளிலும் இயக்கவியல் ஆட்சி செலுத்தி வருகின்றது.
இயற்கை விஞ்ஞானிகள் பொருளியக்கத்தின் பல்வேறு வளர்ச்சிதை மாற்றங்களில் இயக்கவியல் கூறுகளைக் கண்டுணர்ந்து வியந்தனர். இயற்கையோடு இடைவிடாத போராட்டத்தில் மனித சிந்தனையில் அகவயப்பட்ட சிந்தனைக்கும், புறவயப்பட்ட சிந்தனைக்கும் இடையே முரண்பாடு உருவானது.சமூகசிந்தனைவாதிகள், சமூக பொருளாதார அரசியல் இன்னபிற கூறுகளில் உள்ள இயக்கவியல் கூறுகளை கண்டுணர்ந்து சமூக மாற்றத்திற்கு பங்களிப்பு செலுத்தினர். இதன் காரணமாக அடித்தளம் மேற்கோப்பு என்ற முரண்பாடு எழ காரணமாயின.
மனித நடவடிக்கைகளை சிந்தனையையும் நடைமுறையும் இணைகின்றது. உணர்வுக்கும் இருப்புக்கும் இடையே முரண்பாடு தோன்றியுள்ளன. இதுபோன்ற பல்வேறு வகையான முரண்பாடுகளை தன்னகத்தே கொண்ட சிந்தனை இயக்கம் நடைபெற்று வருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக