செவ்வாய், 21 ஏப்ரல், 2009

இந்திய தத்துவ முரண்கள் -‍ 3

அகவயம் Vs. புறவயம்

இயற்கையை சாதாரணமாக ஆய்வுக்குரிய ஒன்றாக பார்ப்பது புறப்பொருள். அதேநேரத்தில் அதை ஒரு இயக்குகின்ற ஒரு வாழ்நிலையாக பார்ப்பது என்பது அகப்பொருள். இது, பாயர்பாக்கும், மார்க்சுக்கும், இடையிலான அடிப்படை வேறுபாடுகள் ஒன்றாகும்.

புறவயப்பட்ட பார்வை என்பது உணர்வு உட்பட எல்லாவற்றையுமே புறப்பொருளாக அமைந்து கிடக்கிறது என்றது. அகவயப்பட்ட பார்வை என்பது பொருள் உட்பட எல்லாவற்றையுமே அகப்பொருளாக காண்பது. சிந்தனை வரலாற்றில் சில நேரங்களில் இவை இரண்டும் எதிர் எதிர் நிலை எடுக்காமல் இணைந்தே வாழம். அதேபோல பல சமயங்களில் முரண்பட்டு எதிர்எதிர் நிலையெடுகின்றன.

நமது தத்துவ வரலாற்றை நோக்கும் போது பழங்குடியினர் சமூதாயத்தில் அகவயப்பட்ட பார்வையும், புறவயப்பட்ட பார்வையும் பிரித்தறியா வண்ணம் சேர்ந்தே விளங்கின. அதாவது ஆதிகாலத்தில் விவசாயம் சார்ந்த உற்பத்தி என்பது புறவயப் பார்வையும் அகவயப்பார்வையையும் பிரித்தறிய வண்ணம் சேர்ந்து செயல்பட்டதைக் காணலாம்.

யோகம் என்ற தத்துவம் உள்ளத்தின் சக்தியையும், உடலின் சக்தியையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது. சாங்கியம் என்றொரு தத்துவம் பிரகிருதி என்ற பொருளோடும், புருஷன் என்ற உணர்வோடும், புத்தி என்ற அறிவோடும், அகம் சாரா என்ற சுயமின்மையோடும், பொருளின் மூன்று குணங்களோடும், ஐம்பெரும் பூதங்களோடும் தொடர்புடைய தத்துவமாகும். நியாயம் என்பது தர்க்கம் மற்றும் பகுத்தறிவு முறை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. வைசேடிகம் என்பது நிலம், நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் என்ற ஐம்பூதங்களை கொண்ட பொருளை விளக்குவதாகும். நியாய வைசேடிகர்கள் அறிவு தோற்றவியல் பற்றிய ஆழமான தேடல் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் ஆன்மா குறித்தும், மோட்சம் குறித்தும் நிலவிய மூடநம்பிக்கையிலிந்து விடுபடவில்லை. உலகம் என்பது புறவயமாகவும், உண்மையாகவும் இருக்கின்றது என்ற ஒருநிலை எடுத்தது நியாய வைசேடிகர்களே.

சாருவாகம் முழுமையான புறவய சிந்தனையை கொண்டிருந்த தத்துவம், அதாவது உலக இயற்கையே முழுமுதல் பொருள், அதற்கு அப்பாற்பட்டு எதுவுமில்லை. ஐம்பூதங்களின் கலப்பினால் உடலும், உயிரும், உணர்வும் தோன்றுகின்றது.

சமணம் பொருளை புறநிலையாக நிலைகொண்டு இயங்குவதை ஏற்றுக் கொள்கின்றது.

அதே சமயம், பொருளை அறிய முடியும் என்றும், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தால் உண்மை புலப்படும் என்றும் கூறுகின்றது.

பௌத்தம் நிலையான பொருளை மறுக்கின்றது, ஆன்மாவை மறுக்கின்றது, பிரம்மத்தையும் மறுக்கின்றது. எல்லாம் மாறிக்கொண்டும், அழிந்து கொண்டும் இருப்பதாக பார்க்கின்றது. மறுபுறம் துக்கம், அறம் போன்ற அகவய உணர்வுகளை பற்றிப் பேசுகின்றது.

வேதாந்தம் என்பது பிரம்மத்தையும், ஆன்மாவையும் முறையே உண்மைப் பொருளாகவும், இறுதிப் பொருளாகவும் காண்கின்றது. மற்ற எல்லாவற்றையும் மாயையாக சித்தரிக்கின்றது.

இவ்வாறாக பண்டைய கால தத்துவங்கள் உலகத்தை

-பாருளை - புறவயமாகவும், அகவயமாகவும் அல்லது இரண்டு கலந்த பார்வையை கொண்டவையாக விளங்கின.

இடைக்கால பக்தி இயக்கம் அகவயப்பட்ட சிந்தனைக்குப் புது பொலிவூட்டின.

பிரம்மம்தான் முழுமையான அறிவு ஆகும். புறஉலகம் என்பது பிரமையினால், அதாவது மாயையால் உருவாக்கப்படுகின்றது. ஆகவே புறஉலகம் என்பது வெறும் மாயையே என்று அத்வைத வேதாந்தம் கூறுகின்றது. கருத்தே முற்றிலும் உண்மை என்றும் அக்கருத்திலிருந்துதான் உலகம் பிறக்கின்றது என்றும் கூறும் அத்வைத வேதாந்தமே இந்திய தத்துவங்களில் முழுமையான அகவய ஆன்மீக வாதம் என்று சொல்லலாம்.

விசிட்டாத்வைதம் என்ற தத்துவம் புறஉலகத்தையும், உயிர்களையும் உண்மை என்று ஏற்றுக் கொள்கின்றது. அதே சமயம் உலகத்தையும், உயிர்களையும் உள்நின்று இயக்குபவன் இறைவனே என்று புறவயசிந்தனையை ஊட்டுகின்றது. துவைதம் என்ற தத்துவமும் இவ்வாறே காண்கின்றது

பொதுவாக பக்தி இயக்கம், மொழி, இசை, போன்றவற்றின் வழியாக மன உணர்வையும் மன எழுச்சியையும் வெளிப்படுத்தியது.

ஐரோப்பியர் வருகைக்கு பின்னர் புறவயப்பட்ட விஞ்ஞான பார்வையின் செல்வாக்கு பெற ஆரம்பித்தது. இது இந்திய பகுதிகளில் மறுமலர்ச்சி இயக்கம், தேசிய இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது.

இயற்சை விஞ்ஞானர்கள் என்பவை உலகப் பொருட்கள் அவை புறத்தே, தம்மில் தாமே எப்பட உள்ளனவோ அப்படியே அறிந்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தின. இதுதான் விஞ்ஞானவாதம். விஞ்ஞானவாதம் என்பது 17,18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு உருவான தத்துவமாகும்.

தத்துவ துறையிலும் இப்படிப்பட்ட கண்ணோட்டத்தை பார்க்க முடியும் மார்க்சிற்கு முந்தைய பொருள் - முதல்வாதிகள் பொருளை புறவயப்பட இயக்கமாக மட்டுமே கண்டனர். மார்க்ஸ் மட்டும்தான் பொருளை அகவயப்பட்டதாகவும், புறவயப்பட்டதாகவுமான மனித நடைமறையிலும், மனித வாழ்விலும் வைத்துப் பார்த்தார். இதுதான் மார்க்சிய இயங்கியல் என்பதாகும்.

இந்த பார்வையானது மனித முயற்சிகளையும், மனித நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிடும் இத்தகைய விஞ்ஞான பார்வையின் செல்வாக்கிலிருந்து பொதுவுடைமை இயக்கம் தப்பிக்க இயலவில்லை. வார்க்க போராட்ட நடைமுறைகளை, புறந்தள்ளி, பாராளுமன்ற போராட்டத்தையே உயர்த்திபடிக்கும் பொதுவுடைமையாளர்கள் இத்தகைய கண்ணோட்டத்திற்கு ஆட்பட்டார்கள்.

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தமிழகத்தில்,பெரியாரியம் போன்ற அகவயப்பட்ட சிந்தனை முறையைக் கொண்டு சமூக இயக்கம் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1960களில் அகவயப்பட்ட சிந்தனைக்கும், அகநிலை வாதத்திற்கும் உணர்வூட்டியவர்கள் இருத்தலியல் வாதிகளும் மார்க்சிய - லெனினியஸ்டுகளும் ஆவர்.

இருத்தலியவாதிகள் என்பவர்கள் மனிதநேயம், மானுட இருப்பு, போன்றவைகளை அடிப்படையாக கொண்டு தத்துவத்தை அறிமுகம் செய்தனர்.

மார்க்சிய-லெனினிய பொதுவுடைமையாளர்கள், புரட்சிகர நடைமுறையை அகவயமாக்கியவர்கள், சமூக நடைமுறையை கட்சியின் நடைமுறையாக மாற்றிக் கொண்டவர்கள், புறவய ஆய்வு என்பதை புறக்கணித்தவர்கள்.

பின்னர் தோன்றிய அமைப்பியல் வாதிகள் என்பவர்கள் ஒருவகையில் புறவயப்பட்ட பார்வையை உடையவர்களாக இருந்தார்கள்.

சமூகம் புறவயமானது, சிந்தனை அகவயமானது, புறநிலையும் அகநிலையும் சந்திக்கின்ற இடம் நடைமுறை அகவயப்பட்டதற்கும் புறம்வயப்பட்டதற்கும் அடையிலுள்ள முரண் இயங்கியல் வகைப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக