செவ்வாய், 7 ஏப்ரல், 2009

பிளாட்டோவின் அடிப்படை உருவக் கொள்கை/பொதுமைக் கோட்பாடு:‍

பிளாட்டோவின் அடிப்படை உருவக் கொள்கை/பொதுமைக் கோட்பாடு:‍
பிளாட்டோ பழைமையான கிரேக்க தத்துவ வாதி. கணிதவியல் மேதை. தத்துவ வாதம் புரிந்தவர். ஏதன்ஸ் அகாதமியை நிறுவியவர். மேற்கு உலகு தத்துவத்தின் அடிப்படைகளை நிறுவியர்களில் ஒருவர். இவர் சாக்ரட்டீசின் மாணவர். அரிஸ்டாடில் இவருக்கு மாணவர் ஆவர்.

அடிப்படை உருவம்/ பொதுதன்மை

பிளாட்டோ அடிப்படை உருவம்/ எண்ணம் கொள்கையை உடையவர்.

சிறந்த முறையில் முயற்சித்தால் தத்துவ அறிவை அடையலாம் என்ற சாக்ரடீஸ்
கருத்தை ஏற்றுக் கொண்டார்.

சாதாரண நோக்கில் பார்க்கும் பொருளெல்லாம் சதா மாறுதல் அடைந்துக் கொண்டே இருப்பதால் அவற்றைக் குறித்த உண்மையை அறிய இயலாது என்ற ஹெராக்லிதுவின் கருத்தையும் ஏற்றுக் கொள்கிறார்.

பரமாணுவாதிகளின் பன்மைத்தத்துவத்தை ஆதரித்து அவர் அடிப்படைச் சக் திகள் இருக்கின்றன என்றார்.

'அறிவின் யதார்த்தமான விசயம் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகமும் அதன் பொருள்களுமல்ல; அறிவின் யதார்த்தமான விசயங்கள் உலகத்தைக் கடந்தவை, நிலையானவை, ஒரே மாதியானவை புலங்களுக்குப் புலப் படாதவை. பொருட்களும் மனமும் ஆகும்'
இது பித்தாகோரின் 'உருவம்' தத்துவத்தைச் சார்ந்திருக்கிறது.

புலன்களால் அறியும் அறிவுக்குப் பிளாட்டோ அதுக முக்கியத்துவம் வழ்ங்கவில்லை. புலனறிவு, பொருட்களின் யதார்த்த நிலையைத் தெரிவிப்பதில்லை. அது நமக்குப் பொருட்களின் வெளித் தோற்றத்தையே தெரிவிக்கிறது. உண்மையான ஞானம் அறிவாலும் சிந்தனையாலும் ஏற்படுகின்றது. புலங்களின் உலகம் ஒரு கீழ் நிலையான போலி யதார்த்தமாகும். அது யதார்த்தத்தின் ஒரு யூகம் மட்டுமே.


" பொருட்களின் பழைய, அனாதியான கண்ணுக்குப் புலபடாத அடிப்படை உருவம் அப்பொருட்களிலிருந்து வேறானதாகவும் சுயேச்சையானதாகவும் இருந்தது.பொருட்களில் மாற்றங்கள் நிகழ்தாலும் இவ்வடிப்படை உருவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை..

உதாரணமாக குதிரை என்பது ஒரு குறிப்பிட்ட கருவாகும். அதை நாம் கண்கள்ளால் பார்க்கிறோம்; கைகளால் தொடுகின்றோம்; புலன்களால் உணர்கின்றோம். ஆனல் நிகழ்கால கட்ந்தகால வருங்கால லட்சக்கண்க்கான குதிரைகளிலே குதிரைத்தன்மை நிச்சயமாக இருக்கும். குதிரைகள் எல்லாமே அழிந்தாலும் குதிரைத்தன்மை அழியாது.

பிளாட்டோ இந்தக் குதிரைத் தன்மையைக் குதிரைத்தன்மையைக் குதைப் பொருளின் பழைய அனாதியான புலங்களுக்கு புலப்படாத அடிப்பதை உருவம் என்கிறார். இந்தக் குதிரைத்தன்மையை இந்தக் குதிரைப் பொருளிலிருந்து வேறானதாகவும் சுயேச்சையானதாகவும் மாற்றமில்லாததாகவும் நிரூபிக்க விரும்புகிறார்.

நாம் காணும் பொருள்கள் அனைத்தும் அனாதியான அடிப்படை உருவங்களின் - பொதுதன்மையின் நிழல்கள் அல்லது முழுமைப் பெறாத நகல்களாகும். தனிப்பொருட்கள் வரலாம், போகலாம். ஆனால் அடிப்படை உருவம்/ பொதுதன்மை ஒரேவிதமாக எப்போதும் இருந்து வரும். தனிநபர்கள் வந்துக்கொண்டும் போய் கொண்டும் இருப்பார்கள். ஆனால் மனிதத் தன்மை மனித இனம் இருந்துக்கொண்டே இருக்கும்.

பித்தாகோரும் பிளாட்டோவும் அடிப்படை உருவம் அல்லது எண்ணம் என்பதை வலியுறுத்துகின்றனர். பொருள் உலகம் அவற்றைப் பிரதிபலிப்பதாகும்..
ஆனால் அரிஸ்டாடில் இரண்டையும் பிரிக்கவியலாது என்பார்.

அடிப்படை உருவம் பொருளில் நிறைந்துள்ளது. பொதுதன்மை தனிநபர்களில் நிறைந்துள்ளது. இவ்விரண்டையும் தனித்தனியாக புரிந்துக் கொள்ளலாம். ஆனால் பிரிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக