திங்கள், 6 ஏப்ரல், 2009

பிராங்க்பர்ட் மார்ச்சியம்

மாக்ஸ், ஹெக்கெய்மர், தியோடர் அடோர்னா ஹெபர்மா போன்ற மார்ச்சிய ஆய்வாளர்கள் இதன் முண்ணனியில் இருந்து செயல்பட்டார்கள்.

இவர்களின் நோக்கம் கான்ட், ஹெகல், மார்க்ஸ் போன்ற வளர்ந்த ஜெர்மன் தத்துவ மரபை நுணுகி ஆராய்வது ஆகும்.

இவர்கள் உருவாக்கிய கொள்கை விமரிசன கொள்கை ஆகும்.

இதற்கான அடிப்படையாக இருந்தது, சமூகவியல், மானுடவியல் துறைகளாகும்.

ஐரோப்பாவில் இருத்தலியமும் பிராய்டிசமும் தோன்றி செழித்த காலங்களில் அவற்றை விமரிசித்து விவாதித்து மார்க்சியத்தை செழுமைப்படுத்தியவர்கள் இவர்கள்.

இறுதியாக ஜெர்மனிய இருத்தலியம் கான்டை நோக்கி சாய்ந்தது: ஆனால் பிராங்க்பர்ட் மார்ச்சியமோ ஹெகலியத்தை நோக்கிச் சாய்ந்தது.

கான்டிய தத்துவம் அறவியல், சுதந்தரம் தனிமனித சுயாதீனம், ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றது.

ஹெகலிய தத்துவம் மனித அறிவு, சுதந்திரம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக