செவ்வாய், 28 ஏப்ரல், 2009

பிளாட்டோவின் தத்துவ கூறுகள் எங்கிருந்து வந்தன?

பிளாட்டோவின் தத்துவ கூறுகள் எங்கிருந்து வந்தன?

பித்தாகோர் (கி.மு. 582-493)

-உருவம்தான் அடிப்படைத் தத்துவம் அல்லது பொருள் என்று பித்தாகோர் முடிவுக்கு வந்தார். உருவம் எண்ணிக்கையில் வெளிப்படுத்தலாம். உதாரணமாக நீளம், அகலம், சுற்றளவு போன்றவை ஆகும். இது பின்னர் எல்லாப் பொருட்களும் எண்ணிக்கைகளே என்றானது.

-எலியா நகரத்தவரின் தத்துவம் நிலையான ஆன்ம அத்வைத தத்துவம்



ஹெராக்லிது (கி. மு 535-435)

மாறுதல் தத்துவத்தையும் அழிவுடைமையையும் ஏற்றுக் கொண்டவர். அவரது கருத்துப்படி உலகம் படைக்கப்படுவதற்கும், அழிவதற்குமான யுகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் உலகம் படைக்கப்பட்டு தீயால் அழிந்து விடுகின்றது.

யூனிக் தத்துவவாதிகளைப் போலவே ஹெராக்லிதுவும் ஒரு இறுதி சக்தி என்று நெருப்பைக் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர் மாறுதல் அல்லது பரிபூரண வாதத்தை அதிகமாக வலியுறுத்துகின்றார்.

உலகம் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு பொருளும் விளக்கொளியைப் போல ஒவொரு வினாடியும் அழிந்தும் உண்டாகிக் கொண்டும் இருக்கின்றது.

ஸ்திரத்தன்மை என்பது வெறும் பிரமையேயாகும். பிரமையில் உருவான அந்த ஸ்திரத்தன்மை மாற்றத்தின் வேகத்திலும் தனக்கு முந்தைய பொருளைப் போலவே உண்டாகும் பொருளினாலும் ஏற்படுகின்றது.

இவ்வாறாக ஹெராக்லிது எலியாத் தத்துவாதிகளுக்கு எதிரான கருத்துக் கொண்டிருந்தார். இவர் அத்வைதியாக இல்லாமல் துவைதியாகவும் நிலையான தத்துவாளராக இல்லாமால் மாறுதல் தத்துவாதியாக இருந்தார்.

'நீ ஒரே ஆற்று வெள்ளத்தில் இரண்டு தடவை குளிக்க முடியாது. ஏனெனில் ஆற்று நீர் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். உலகத்தின் தோற்றமே அதன் அழிவாகும். உலகத்தின் அழிவே அதன் தோற்றமாகும். ஸ்திரமான குணங்களுடைய எந்த பொருளுமே இல்லை. இசையின் ஏற்ற இறக்கத்தாலே அதன் எதிர்மறைகளின் இணைப்பாலேயே அது முழுமை பெறுகின்றது.'

எதிர்மறைகளின் போராட்டத்திலேயே உலகம் இயங்குகிறது. போர் எல்லாவற்றின் தந்தையும் அரசனும் ஆகும். போரில்லாவிட்டால் உலகம் அழிந்துவிடும். அது இயங்காமல் செத்துவிடும்.

மாறுதல் தத்துவம்/ அழிவுடைமை விதியை வலியுறுத்தி ஹெராக்லிது கூறியதாவது:-

இந்த விதி கடவுளர்களாலோ மனிதர்களாலோ உண்டாக்கப் பட்டதல்ல. இஇது எப்போதுமே இருந்து வந்தது.வருங்காலத்திலும், அப்படியே இருக்கும். நிரந்தர ஒரு உயிருள்ள தீயாக ஒரு குறிப்பிட்ட அளவின் படி எரிந்தும் அணைந்தும் கொண்டிருக்கும்.

ஹெராக்லிது தனக்கு தெரியாமலேயே உலகத்தின் மகத்தான புரட்சிகர தத்துவமான ' இயக்கவியல் பொருள்' முதல்வாதத்தின் தந்தையானார்.

ஹெகல் ஹெராக்லிருவின் தத்துவ இயலை அடிப்படையாகக் கொண்டு தனது ஆழ்ந்த புதிய தத்துவ இயலை உருவாக்கினார்.
மனம் பொருள் இவ்விரண்டில் எந்த ஒன்றுக்கும் முக்கியத்துவம் அழிக்க வேண்டிய அவசியம் ஹெராக்லிருவுக்கு இல்லாமல் போயிற்று. ஆனால் ஹெகல் எண்ணத்திற்கு முதலிடம் வழங்கினார்.

'மாறுதலுக்குட்பட்டாலும் மன/ ஆன்மாவே உண்மையான தத்துவம்' என்றார். ஹெகல்.

அவர் உலகத்திலிருந்து உள்ளத்தை நோக்கிச் செல்லாமல் உள்ளத்திலிருந்து உலகத்தை நோக்கிச் செல்ல முயன்று இயக்கவியலை எண்ண முதல்வாத மாக்கினார்.

டெமாகிரட்ஸ் ( 460 - 370)

தனது பரமாணு தத்துவத்தால் கிழக்கத்திய மேற்கத்திய தத்துவ அறிஞர்களிடையே உன்னத இடத்தை பிடித்தவர்.

யதார்த்தவாதம் - சாக்ரடீஸ், பிளாட்டோ
ஆராய்ச்சிவாதம் - அரிஸ்டாடில்

சாக்ரடீஸ்

' சிறந்த முறையில் முயற்சி செய்தால் அறிவைப் பெறமுடியும்' என்றார்.

நாம் புரிந்து கொள்ளும் விசயங்களையும், நம்முன் வரும் விசயங்களையும், அவற்றுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை வைத்து ஆராய வேண்டு, இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு நாம் உண்மையை அடையலாம்.

"சரியாக செயல்புரிய சரியாக சிந்திப்பது அவசியம்"

பிளாட்டோ தனக்கு முந்தைய தத்துவங்களை இணைத்தார்.

1. சிறந்த முறையில் முயற்சி செய்தால் அறிவைப் பெறமுடியும் என்ற சாக்ரடீஸ் கருத்தை ஏற்றார்.
2. சாதாரண நோக்கில் நாம் பார்க்கும் பொருள்களெல்லாம் சதா மாறுதல் அடைந்து கொண்டே இருப்பதால் அவற்றைக் குறித்த மகத்தான உண்மையை அறிய முடியாது என்ற ஹெராக்லிது கருத்தை ஏற்றார்.
3. எலியா நகரத்தவரின் தத்துவமான மாறுதல் அடையும் உலகத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்.
4. பரமாணுவாதிகளின் துவைத(பன்மை) தத்துவத்தை ஆதரித்து அவர் பல அடிப்படை சக்திகள் இருக்கின்றனவென்றார்.
5. உருவம்தான் அடிப்படைத் தத்துவம் அல்லது பொருள் என்ற பித்தாகோர் தத்துவத்தை ஏற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக