சனி, 16 மே, 2009

உயிரியல் மானுடவியல் -Biological Anthropology

மனித வரலாறு பழங்காலத்தில் இன்னும் வேறுவிதமான முறையில் வளர்ந்துவந்தது. அது குறைந்தது 40 லட்சம் வருடங்களுக்கு முன், குரங்கு மாதிரியான ஒரு உயிரிகளாக கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிறு குழுவாகப் பிரிந்துவந்து பின்னர் தனியான பரிணாமப்பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஆக, மானுடவியலாளனின் ஒப்பிடும் முறையும் கண்ணோட்டமும், இன்னும் பல வரலாற்றுக்கு முந்தைய மனித சமூகங்களின் பழக்க வழக்கங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். நாம் மனித சமூகத்தைப் புரிந்து கொள்ள, வாழும் இயற்கையில் மனித சமூகத்தின் இடம் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

உயிரியல் மானுடவியல், மனிதசமூகத்தை ஒரு (genus) பேரினமாகவும் (species) இனமாகவும் பார்த்து, அதன் பரிணாமப் பாதையை வரைந்து, அதற்குள் இருக்கும் உயிரியல் வித்தியாசங்களைப் பற்றியும் ஆராய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக