கலாச்சார மானுடவியல்
கலாச்சார மானுடவியல் Cultural Anthropology
மானுடவியலின் பெரிய துறையான கலாச்சார மானுடவியல், ஒப்பபீடு முறையுடன் , பரிணாமப் பார்வையில் மனித கலாச்சாரத்தை அணுகுகிறது.
கலாச்சாரம் என்பது, ஒரு சமூகத்தின் அனைத்து அறிவையும், மதிப்பீடுகளையும், பழங்காலம் முதல் தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய வழிகள் மூலம் உலகத்தைப் பார்ப்பதையும், ஒவ்வொரு தலைமுறையும் முந்திய தலைமுறையிடமிருந்து பெற்று அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் இந்த -- ஜெனடிக் சம்பந்தமில்லாத -- விஷயங்கள் வார்த்தைகள் மூலமாகவும், கருத்துக்கள் மூலமாகவும், குறியீடுகள் மூலமாகவும் செல்லுகின்ற விஷயங்களே.
கலாச்சார மானுடவியலாளர்கள் மனிதர்களை ஆராய்வதில் முக்கியமானத ஆய்வு இனக்குழுவின் பழக்க வழக்கங்கள் மீதான ஆய்வு (ethnographic method) என்பது. இது அந்த மனிதக்குழுவைச் சேர்ந்தவர்களை ஆராய்வது, அவர்களை பேட்டி காண்பது, அவர்களது சொந்த மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களது மொழியில் உரையாடுவது போன்றது. Ethnographers என்ற இவர்கள், ஓர் இடத்தில் பார்த்ததை மற்ற இடங்களில் பார்த்ததோடு, மற்ற சமூகங்களோடு ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக