சமூக மாற்றத்தின் அகநிலைக்காரணிகள்
மாவோ சமூக மாற்றத்திற்கான அகவயக்காரணி குறித்த விவாதங்களைப் பரவலாக்கினார். பொருளாதாரம் அல்லாத சுரண்டல் மற்றும் அடக்குமுறைகளின் வடிவங்களை கண்ணுற்றார். ‘கலாச்சாரப்புரட்சி’ என்ற பண்பாட்டு ஆயுதத்தை நமக்கு வரலாற்றில் முதன்முதலில் கொடுத்தார். வழமையான பொருளாதார அரசியல் மாற்றத்திற்கு கலாச்சார அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்த அதன் பிரத்யோகமான செல்வாக்கை சுட்டிக்காட்டினார். அவரை தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் மார்க்சியத்தின் கலாச்சார அரசியல் என்ற வட்டாரத்தை அகலமானதாகவும் ஆழமானதாகவும் ஆக்கிதோடு சமூக மாற்றத்திற்கான அகவயக்காரணிகளில் முக்கியமானதாக கலாச்சார அரசியல் இடம் பெறுகிறது., உட்கிரகித்துக் கொள்ளாமல் இந்திய பொது உடைமை இயக்கக் கட்சிகளும் குழுக்களும் நீண்ட காலம் ஒரு வகையான கடினமான மார்ச்சிய அணுகுமுறையை முறையிலாக கொண்டிருந்தனர். அடித்தளம்/மேற்கட்டுமானம் என்ற முரண்களுக்கு மார்க்சிய ஆசான்கள் இத்தகைய இறுக்கமான அணுகுமுறையை கடுமையாக விமரிசித்தார்கள். இயங்கியல் எதிர்வுகளை நெகிழ்வாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு. ஒன்றிலிருந்து மற்றதை வருவிக்கும் முறையியலை அவர்கள் ஏற்கவில்லை. எந்த வகையான குறைத்தல் வாதத்தையும் அவர்கள் ஏற்கவில்லை. பொது உடைமையர் தமது இயக்க நடைமுறையில் பொருளாதாரவாதம், புறவய அணுகுமுறை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு கலாச்சார அரசியலை நோக்கி வளரவேண்டும் என்ற கோரிக்கை கட்சி சாராத மார்க்சியர்களிடம் எழுந்ததாகத் தோன்றுகிறது.
ஆனால் இத்தகைய தொரு இயங்கியல் போக்கை உணரமாட்டாமல்
ஆனால் இத்தகைய தொரு இயங்கியல் போக்கை உணரமாட்டாமல்
சமூக பொருளாதாரம் புறநிலையானது. தனிமனிதரின் விருப்பத்திற்கும் சிந்தனைக்கும் மாறாக புறநிலையில் நின்று சமூக பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆனால் அரசியல் பண்பாட்டு தத்துவார்த்தம் ஆகியவற்றின் மீது தனிமனிதரோ அல்லது ஒரு குழுவோ அல்லது ஒரு இயக்கமோ செல்வாக்கு செலுத்தமுடியும்.
குறைத்தல்வாதம்
குறைத்தல் வாதம் என்பது அனைத்து விசயங்களிலும் காணமுடியும். இது முரண்பாட்டின் ஒரு கூறிலிருந்து இன்னொரு கூறை வருவிப்பது என்ற அணுகுமுறையைக் கொண்டிருக்கும். முரண்பாட்டின் இரண்டு கூறுகளில் ஒன்றிற்கு மட்டும் பிரதான அழுத்தம் கொடுப்பது என்ர ஒருபக்க பார்வையைக் கொண்டிருக்கும்.
விஞ்ஞானத்தில் அகநிலையை தவிர்த்து விட்டு எல்லாவற்றையும் புறநிலையாக குறைத்து கொள்வது பாசிடிவிசம் எனப்படும். சமூக விஞ்ஞானத்தில் எல்லாவற்றையும் அகநிலையாக குறைத்துக் கொள்வது இலட்சியவாதம் எனப்படும்: மனித சமூக நடவடிக்கையை தத்துவத்தைக் கைவிட்டு நடைமுறையாக குறைத்துக் கொள்வது அனுபவவாதம் எனப்படும். பகுதியை மறுத்து முழுமையாக குறைத்துக்கொள்வதையும் அல்லது முழுமையை புறக்கணித்து பகுதியாக குறைத்துக்கொள்வதையும் நாம் பார்க்கலாம்.
மிக நீண்டகாலமாக இந்திய மார்ச்சியர்கள் பொருளாதார குறைத்தல் வாத்திற்கு ஆளாகியிருப்பதும் மேற்கட்டுமான விசயங்களில் கவனம செலுத்துவது என்பது இல்லாமல் இருப்பதும் வியப்பிற்குரியதன்று. ஆனால் 1990 களுக்கு பிறகு அவர்கள் மேல்கட்டுமான விசயங்களில் தலையிட வேண்டிய நிர்பந்தம் இருந்ததை உணர்ந்தவர்கள் தமது மரபு மார்ச்சிய அடிப்படைகளை விட்டு விலகாமல் தமது திட்டத்தில் மேற்கட்டுமான விசயங்களில் தலையீடு செய்வதையே விரும்பினர். குறிப்பிடத்தக்க வகையில் இக்காலத்தில் அம்பேத்கர் - பெரியாரிய சிந்தனைகள் மார்ச்சியர்களால் சுவீகரித்துக் கொள்ளப்பட்டன. தலித்தியம், பெண்ணியம் ஆகியவற்றோடு சமூக விடுதலை குறித்த புதியதொரு வேலைத்திட்டம் உருவாக்கிக் கொள்வதற்காக அவசியம் இருப்பதாக உணர்ந்தனர். இவை கூட சந்தர்ப்ப வசத்தாலும் அனுபவ வாதத்தாலும் மட்டுமே நிகழ்ந்தது.
இத்திட்டத்தில் சமூக, பண்பாட்டு, கலாச்சார அரசியல் பற்றிய கவனம் செலுத்தியது இதன் சிறப்பு தன்மையாகும். மேலும் தமிழ்கத்தின் குறிப்பான பிரச்சனைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அவற்றை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சியும் காணப்படுகிறது. ஆனால் இதுவும் ஒரு சந்தர்ப்பவாதத்தின் விளைவு என்பதை உணரமுடிகிறது. நுண் அரசியல் கலாச்சார அரசியல் போன்ற விசயங்களில் அக்கறை கொண்டவர்கள் மக்கள் யுத்த குழுவினர் மட்டுமே என்று சொல்லமுடியும். அதுவும் தமது அனுபவத்தின் விளைவாகதான் என்பதை பார்க்க முடியும்.
ம.க.இ.க. தனது அரசியல் நடவடிக்கைகளில் தமிழகத்தின் சமூக பண்பாட்டு கலாச்சார அரசியல் போன்ற விசயங்களில் திறன்மிக்க வகையில் தலையீடு செய்வதைக் காணமுடிகிறது. குறிப்பாக சாதியம், பார்ப்பனீயம் பெரியாரியம், மொழி மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்துகின்றது. இத்தகைய போக்கு பொருளாதாரத் தளத்திற்கு மிகை அழுத்தம் கொடுக்கும் மரபு கம்யூனிஸ்டுகளிடமிருந்தும் பிற குழுக்களிடமிருந்தும் வேறுபடுத்தும் விசயமாகும். சமூக, பண்பாட்டுத்தளத்திற்கும் உரிய கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத் தகுந்ததாகும். ஆனால் இதன் அவசியத்தை தத்துவ தளத்தில் புரிந்து கொண்டு உணர்வு பூர்வமாக செயல்படுகிறார்களா என்பது சந்தேகமே. இந்தியாவின் வரலாற்றுரீதியாக மேல் கட்டுமானத்தின் செல்வாக்கு மற்றும் அடித்தளம் மற்றும் மேல்கட்டுமானம் ஆகியவற்றிற்கிடையேயான இயங்கியல் ரீதியிலான உறவு ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டு செயல்படுகின்றனரா என்பது கவனிக்கத் தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக