வியாழன், 8 அக்டோபர், 2009

மாந்திரீக யதார்த்தவாதம்(மு.வளர்மதி)

யதார்த்தவாத அடிப்படைகளுக்கு எதிராகவும், சோஷலிச யதார்த்தவாதம் மாற்றாகவும் மிகை யதார்த்தவாதம் , மாந்திரீக யதார்த்தவாதம் போன்ற இலக்கியக் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் மாந்திரீக யதார்த்தவாதம் என்பது தென் அமெரிக்கச் சூழ்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணம் கொண்ட முறையாக இது தோன்றியது. மிகை யதார்த்தவாதம் பிரான்சிலும் ஸ்பெயினிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தோன்றியது

மாந்திரீக

யதார்த்தவாதம்

யதார்த்தம் குழப்பமானது. அதை நேரடியாகப் பிரதிபலிக்க முடியாது என்ற சிந்தனை அடிப்படையில் தோன்றியது மாந்திரீக யதார்த்தவாதம். யதார்த்த உண்மைகளை நேரடியாகக் கூறாமல் பூடகமாக, புதிராகக் கூறுவது என்பது இது

யதார்த்தவாதத்தில் சமூகம் நேரடியாக புறவயமாக அணுகப்படுகிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தில் புறவயத்தை விட அகவய அணுகுமுறை அதிகம். அதனால் தான் குழப்பமான யதார்த்தத்தை நேரடியாகக் கூறுவதை விட, பல மனப்படிமங்களை அதன் மீது ஏற்றி ஒரு மாந்திரீகமாகக் கூறுவது சிறந்தது என்று மாஜிகல் ரியலிஸ்ட்கள் கூறுகின்றனர். அதனால்தான் தொல்கதைகள், சடங்குகள், புராதன நம்பிக்கைகளை அதிகமாக இதில் பயன்படுத்துகின்றனர்.

மாந்திரீக யதார்த்தவாதம் யதார்த்தவாதத்திற்கும் உள்ள வேறுபாடுங்கள்

1. யதார்த்தவாதத்தில் சமூகம் நேரடியாக புறவயமாக அணுகப்படுகிறது. மாஜீகல் ரியலிசத்தில் புறவயத்தை விட அகவய அணுகுமுறை அதிகம். அதனால் தான் குழப்பமான யதார்த்தத்தை நேரடியாகக் கூறுவதை விட, பல மனப்படிமங்களை அதன் மீது ஏற்றி ஒரு மாந்திரீகமாகக் கூறுவது சிறந்தது என்று மாஜிகல் ரியலிஸ்ட்கள் கூறுகின்றனர். அதனால்தான் தொல்கதைகள், சடங்குகள், புராதன நம்பிக்கைகளை அதிகமாக இதில் பயன்படுத்துகின்றனர்

2. யதார்த்தவாதத்தில் சமூக ஆய்வு மையமாக இடம் பெறுகிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தில் இந்த ஆய்வு அதிகம் இடம் பெறுவதில்லை

3. யதார்த்தவாதத்தில் காரண காரியத் தொடர்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தில் இது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பின் நவீனத்துவத்தின் அங்கமானது தான மாந்திரீக யதார்த்தவாதம்

4. யதார்த்தவாதத்தில் தர்க்கரீதியான முறை உள்ளது. மாந்திரீக யதார்த்தவாதம் அதர்க்கமானது

.

5. யதார்த்த வாதத்தில் வரலாற்று முறை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாந்திரீக யதார்த்தவாதத்தில் இது மறுக்கப்படுகிறது. கணம் தான் முக்கியம், வரலாறு பழங்காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதெல்லாம் அவசியமில்லை என்பது மாந்திரீக யதார்த்தவாதம் காலம் முன்னுக்குப் பின் முரணாக சின்னாபின்னமாக மாந்திரீக யதார்த்தவாதத்தில் இடம் பெறுகிறது.

1 கருத்து: